கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - 6 தொகுதிகளில் போட்டியிட்ட 74 பேர் டெபாசிட் இழப்பு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட 86 பேரில் 74 பேர் தங்களது வைப்புத் தொகையை (டெபாசிட்) இழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதி களில் 86 பேர் போட்டியிட்டனர். 6 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட்டவர்களில் பர்கூர் மதியழகன், ஓசூர் ஒய்.பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரன், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஊத்தங்கரை தமிழ்செல்வம், கிருஷ்ணகிரி அசோக்குமார், வேப்பனப் பள்ளி கே.பி.முனுசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வைப்புத்தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். தேர்தலில் பதிவாகும் மொத்தவாக்குகளில் 6-ல் ஒரு பங்குவாக்குகளை பெறும் வேட்பாளர்களுக்கு, தேர்தல் ஆணையம் வைப்பு தொகையை திரும்ப வழங்கும். குறைவான வாக்குகளைபெறும் வேட்பாளர்கள் வைப்புத் தொகை (டெபாசிட்) இழந்தவர் களாக கருதப் படுவார்கள். அதன்படி, மாவட்டத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட 86 பேரில், 74 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்