தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட - அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா :

By செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்ற அரசுதலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உள்ளிட்ட அரசு வழக்கறிஞர்கள் தங்களது பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண், அரசின் சிறப்புவழக்கறிஞராக ஏ.எல்.சோமையாஜி, கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாக வி.எஸ்.சேதுராமன், எஸ்.டி.எஸ்.மூர்த்தி, பி.எச்.அர்விந்த் பாண்டியன், நர்மதா சம்பத், ஏ.குமார் ஆகியோர் பதவி வகித்தனர்.

இதேபோல மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஏ.நடராஜன், அரசு ப்ளீடராக வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன், சிறப்பு அரசு ப்ளீடர்களாக சி.திருமாறன், சி.முனுசாமி, எல்.பி.சண்முகசுந்தரம், கூடுதல் அரசு ப்ளீடர்களாக ஆர்.வி.பாபு, எம்.பெருமாள், ஜெ.புருஷோத்தமன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் முகமது ரியாஸ், கார்த்திகேயன் உள்ளி்ட்ட பலர் பதவி வகித்து வந்தனர். இவர்கள் பெரும்பாலும் அதிமுக வழக்கறிஞர் அணியினர் என்பது குறி்ப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆட்சி மாற்றம்காரணமாக அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட அரசுவழக்கறிஞர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துஅதற்கான கடிதத்தை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். விரைவில் இப்பதவிகளுக்குதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

தமிழகம்

28 mins ago

சுற்றுலா

45 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்