கோவில்பட்டி தொகுதியில் - ஹாட்ரிக் வெற்றி பெற்ற கடம்பூர் ராஜு :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் கடம்பூர் செ.ராஜூ, அமமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மார்க்சிஸ்ட் சார்பில் கே.சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.கோமதி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கு.கதிரவன் உள்ளிட்ட 26 பேர் போட்டியிட்டனர். டி.டி.வி.தினகரன் களம் கண்டதால், தமிழகத்தின் நட்சத்திர அந்தஸ்தில் கோவில்பட்டி தொகுதி இருந்தது.

வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் இருந்தே கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் இருந்தார். 5-வது சுற்றில் டி.டி.வி.தினகரனை விட 19 வாக்குகள் அதிகம் பெற்று, முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில், இறுதிச் சுற்றில் 68,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர நாராயணன் சான்றிதழை வழங்கினார். 56,153 வாக்குகள் பெற்று டி.டி.வி.தினகரன் 2-வது இடத்தை பிடித்தார்.

2011-ம் ஆண்டு முதன் முதலில் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் களம்கண்ட கடம்பூர் ராஜூ, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜி.ராமச்சந்திரனை விட 26,480 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். தொடர்ந்து 2016-ம் ஆண்டு திமுக வேட்பாளர் அ.சுப்பிரமணியனை விட 428 வாக்குகள் அதிகம் பெற்று 2-வது முறையாக வெற்றிபெற்றார். தற்போது நடந்த தேர்தலில் டி.டி.வி. தினகரனை 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, கோவில்பட்டி தொகுதியில் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்