வாக்கு எண்ணிக்கை தொடர்பான பாதுகாப்பு பணியில் 700 போலீஸார் :

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்ட வாக்கு எண்ணும் பணியை ஒட்டி மாவட்டத்தில் 700-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப் பேரவை 2021 பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (2-ம் தேதி) தமிழகம் முழுக்க நடக்க உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப் பட்டுள்ளது. இம்மையத்தின் பாதுகாப்புப் பணியில் மாவட்டத்தில் 700-க்கும் அதிகமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமையில் 3 ஏடிஎஸ்பி-க்கள், 4 டிஎஸ்பி-க்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 700-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள், எண்ணிக்கை மைய வளாகம், நுழைவு வாயில் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த் தப்பட்டுள்ளனர்.

இதுதவிர, மாவட்டம் முழுக்க அந்தந்த காவல் நிலைய எல்லையில் தேர்தல் தொடர்பான வெற்றிக் கொண்டாட்டம், முடிவுகள் அறிவிப்பு தொடர்பான சலசலப்புகள் எதுவும் நடக்காத வகையில் கண்காணிக்கவும் காவல் நிலைய போலீஸார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

உலகம்

3 mins ago

தமிழகம்

30 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

38 mins ago

வாழ்வியல்

57 mins ago

சுற்றுலா

1 hour ago

வணிகம்

6 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்