கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு காரணமாக, புதுச்சேரி மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளத் தனமாக மதுபானங்கள் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் க.தேவமணி கோரிக்கை விடுத்துள்ளார்

இதுதொடர்பாக புதுச்சேரி கலால் துறை இயக்குநருக்கு அண்மையில் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தின்போது, புதுச்சேரி மாநிலம் முழுவதும் மதுபானக் கடைகளுக்கு கலால் துறை சீல் வைத்தது.

ஆனால், 100-க்கும் மேற்பட்ட கடைகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படை யில், கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட மதுக் கடை களை மூட உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், கடைகளில் உள்ள மது இருப்பு குறித்த கணக்கை கலால் துறை கையகப் படுத்த வேண்டும். அனைத்துக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதிப் படுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

8 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

14 mins ago

ஆன்மிகம்

24 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்