தொழிலாளர்களின் பொருளாதார இழப்பை தடுக்க - சலூன்களை திறக்க அனுமதிக்க வேண்டும் : அரசுக்கு சலூன் உரிமையாளர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தொழிலாளர்களின் பொருளாதார இழப்பை தடுக்க, சலூன்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு சலூன் கடை உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சலூன்கள், அழகு நிலையங்களை திறக்க கடந்த 26-ம் தேதி முதல் அரசு தடை விதித்துள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சலூன்கள் உள்ளன. உரிமையாளர் மட்டுமின்றி, 2 முதல் 4 ஊழியர்கள் வரை பணியாற்றும் சலூன்கள் ஏராளமாக உள்ளன. சலூன்களில் வார நாட்களில் தினமும் சராசரியாக 20-க்கும் மேற்பட்டோரும், ஞாயிற்றுக்கிழமைகளில் 50 முதல் 60 வாடிக்கையாளர்களும் வந்து செல்கின்றனர்.

கரோனா தொற்று பரவலைக் காரணமாக வைத்து சலூன் கடைகளை திறக்க அரசு தடை விதித்திருப்பது, இத்தொழிலை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சலூன் கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்துவோர் தொழிலாளர் நலச் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சசிக்குமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், அவர்களை நம்பி குடும்பத்தினரும் உள்ளனர். மாதந்தோறும் கடை மற்றும் வீடுகளுக்கு வாடகைத் தொகை, கடையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் போன்றவற்றை வழங்கவேண்டும். கடந்தாண்டு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து சலூன்கள் சற்று மீண்டு வந்த நிலையில், தற்போது திறக்க தடை விதித்திருப்பது எங்களின் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரித்து விடும்.

இதைத் தவிர்க்க சலூன்களை தினமும், குறைந்தபட்சம் 5 மணி நேரமாவது திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில், முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி கடைபிடித்தல், வாடிக்கையாளர்களின் விவரம் குறித்த கையேடு பராமரித்தல் போன்ற கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படும். கடந்தாண்டு அரசு அளித்த நிவாரணத் தொகையும் எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. தற்போதும் எங்களுக்கு நிவாரணம் வேண்டாம். அரசு எங்களது கடையை திறக்க அனுமதித்தால், அதன் மூலம் நாங்களே வருவாய் ஈட்டிக் கொள்வோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்