நீலகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை - பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. உதகை, கோத்தகிரி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. உதகையை அடுத்த பெந்தட்டி கிராமத்தில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வெள்ளைப் பூண்டு, முட்டைகோஸ் உட்பட சுமார் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தோட்டக்கலைத் துறையினர் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக நடுவட்டத்தில் 40 மி.மீ. மழை பதிவானது.

கோடநாட்டில் 39, கல்லட்டியில் 29, மசினகுடியில் 16.2, கீழ் கோத்தகிரியில் 9.4, கிளன்மார்கனில் 5 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 5.40 மி.மீ. மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்