அரசு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி - அயன்ராசாபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை :

By செய்திப்பிரிவு

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தி, அயன்ராசாபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சுமார்1 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்கா, கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தன. ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்திருந்தனர்.

பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் ஜனவரிமாதம்பெய்த தொடர் மழையால்கதிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் துறை, புள்ளியியல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் விவசாயிகளுக்கு வெள்ளநிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டது. ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம்வீதம் வழங்கப்பட்டு வந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக 10 ஆயிரம் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கவில்லை. இதனை வழங்கக்கோரி விளாத்திகுளம் அருகே அயன்ராசாபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை அப்பகுதி விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். ஊராட்சி தலைவர் இல்லாததால் சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம்வீதம் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்