புதுச்சேரியில் 11 அமர்வுகளில் - இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் :

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் 11 அமர்வுகளில் இன்று தேசிய மக்கள் நீதிமன் றம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமானசோபனா தேவி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியுமான ரமணா உத்தர வின்படியும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், புதுச் சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலை வருமான சத்தியநாராயணன் வழிகாட்டுதலின் படியும் இன்று (ஏப். 10) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், காரைக்கால் மாவட்ட நீதி மன்ற வளாகத்திலும், மாஹே மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

தேசிய மக்கள் நீதிமன் றத்தில் சமாதானமாகக் கூடியகிரிமினல் வழக்குகள், காசோலை வழக்கு கள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன் மனைவி பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள்,ஜீவனாம்ச வழக்குகள், உரி மையியல், சிவில் வழக்குகள், தொழி லாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள் சிவில் வழக் குகள் மற்றும் வங்கி கடன்சம்பந்தப்பட்ட நேரடி வழக்கு கள் என நிலுவையில் உள்ளவழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படவுள் ளது.

இதில் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் கள், அரசுத்துறை அதிகாரி கள், காப்பீட்டு நிறுவன அதிகா ரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்காளிகள் பங் கேற்க உள்ளனர்.

நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள வழக்குகள், நேரடிவழக்குகள் என சுமார்2,139 எடுத்துக் கொள்ளப்பட வுள்ளது. அதற்காக புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகளும், காரைக்கால், மாஹேவில் தலா 1 அமர்வும் என மொத்தம் 11 அமர்வுகள் செயல்பட வுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகளும், காரைக்கால், மாஹேவில் தலா 1 அமர்வும் செயல்படவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

வாழ்வியல்

17 mins ago

ஓடிடி களம்

27 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்