காவிரி ஆற்றை பரிசலில் கடந்து வந்து வாக்களித்த மக்கள் :

By செய்திப்பிரிவு

பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டது ஒகேனக்கல். இங்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒகேனக்கல், பண்ணப் பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1200-க்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க 2 வாக்குச் சாவடிமையங்கள் அமைக்கப்பட்டிருந் தன. ஒகேனக்கல் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் சுமார் 100 பேர் ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றின் மேற்குபகுதியில் கர்நாடக மாநில எல்லையான மாறுகொட்டாய் என்ற இடத்தில் வசிக்கின்றனர். இவர்களுக்கு வாக்குரிமை பென்னாகரம் சட்டப் பேரவை தொகுதியில் தான்உள்ளது.

எனவே, இந்த வாக்காளர்கள் நேற்று பரிசல் மூலம் காவிரியாற்றை கடந்து வந்து மணல் திட்டு என்ற இடத்தை அடைந்து பின்னர் வாக்குச் சாவடி மையம் வரை நடந்து சென்று வாக்கை செலுத்திச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்