புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் - தனியார் நிறுவன ஊழியரின் வாக்கு முன்கூட்டியே பதிவானதால் குழப்பம் :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் தனியார் நிறுவன ஊழியர் வாக்கு முன்கூட்டியே பதிவானதால் குழப்பம் ஏற்பட்டது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் 10-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் குமார். தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் நெல்லித்தோப்பு பெரியார் நகர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கு பூத் சிலிப், அடையாள அட்டை காட்டி வாக்களிக்க சென்றபோது, அவரது வாக்கை யாரோ கள்ள வாக்காகச் செலுத்திவிட்டது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது அங்கிருந்த தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது, “உங்களின் வாக்கு ஏற்கெனவே பதிவாகி விட்டது. 2-வது முறையாக வாக்களிக்க முடியாது” என தெரிவித் தனர். “நான் குடும்பத்தோடு தற்போது தான் வாக்களிக்க வந்துள்ளேன். ஆகவே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதையடுத்து வாக்குச்சாவடி பாதுகாப்பு போலீஸ் அதிகாரி அவர்களை சமாதானப்படுத்தி தேர்தல் அதிகாரியிடம் அழைத்துச் சென்றார். எனக்கு பதிலாக வாக்க ளித்த வேறு நபர் யார்? அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார். எங்களுக்கு வாக்களிக்க அனுமதித்தால் அவர் வாக்கை எப்படி அழிப்பீர் கள்? என கேள்வி எழப்பியதால், அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறினர். இதனால் குமாரையும் அவரது குடும்பத்தினரையும் சமாதானப்படுத்த தேர்தல் அதிகாரிக ளும், போலீஸாரும் முயற்சித்தனர். இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலரிடம், தான் குமார் என்பதற்கான ஆவணங்களைக் காண்பித்து தேர்தல் நடத்தை விதியின்படி வாக்குச் சீட்டு முறையில் தனது வாக்கை செலுத்திவிட்டுச் சென்றார்.

இதுபற்றி தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, “அதுதொடர்பான தகவல் எங்கள் கவனத்துக்கு வரவில்லை” என்று தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்