கவச உடையில் வந்து வாக்களித்த கரோனா தொற்றாளர்கள் :

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், வாக்குப்பதிவின்போது கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.

வழக்கமாக 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், கரோனா தொற்றாளர்களுக்காக இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டது.

மாலை 6 முதல் இரவு 7 மணி வரை, உரிய பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து வந்து கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, புதுக்கோட்டை தொகுதியில் 5 பேர், கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் தலா ஒருவர், அரவக்குறிச்சி தொகுதியில் 6 பேர், அரியலூரில் ஒருவர், தஞ்சாவூர் தொகுதியில் 6 பேர், திருச்சி மாவட்டத்தில் ரங்கம், லால்குடியில் தலா 9 பேர், மண்ணச்சநல்லூரில் 2 பேர், திருவெறும்பூர், முசிறியில் தலா ஒருவர், திருச்சி மேற்கு மற்றும் திருச்சி கிழக்கு 20 பேர் பாதுகாப்பு உடைகளுடன் வந்து வாக்குகளைச் செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்