இரட்டை வாக்கு பிரச்சினை இல்லை : குமரி மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் மா.அரவிந்த் நாகர்கோவில் குருசடிஅந்தோணியார் பள்ளியில் நேற்றுவாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில்உள்ள 2,243 வாக்குச்சாவடிகளிலும் காலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கரோனா விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றன.

வாக்காளர்கள் அனைவருக்கும் வலது கையில் அணிவிக்க கையுறை வழங்கப்பட்டது. கோளாறு ஏற்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்றி நல்ல நிலையில் உள்ள இயந்திரங்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக, கேரள எல்லைப் பகுதி வாக்காளர்களுக்கு இரட்டை வாக்கு இருக்கும் பிரச்சினை கேரளாவில் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த பிரச்சினை ஏதும் இல்லை. தமிழகம், கேரளாவில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் கன்னியாகுமரியில் இரட்டை வாக்கு பிரச்சினை இல்லை. இதை கண்காணிக்க வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வெப்லிங்க் வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு நபர் இரு இடங்களில் வாக்களிப்பது என்பதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்