இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட - காரைக்கால், நாகை மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர் :

By செய்திப்பிரிவு

காரைக்கால் மாவட்டம் காரைக் கால் மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ரவி(எ)நடராஜன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள், நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த 2 மீனவர்கள் என 14 பேர் மார்ச் 23-ம் தேதி இரவு காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர் கள் அனைவரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மார்ச் 24-ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் இம்மீனவர்களை விடுவிக்க முயற்சிகள் மேற்கொண் டன. அதன்படி, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் பேசியதையடுத்து, இலங்கை கடல் பகுதியில் இனிமேல் மீன் பிடித்தால் 2 ஆண்டு சிறை தண் டனை விதிக்கப்படும் என்ற நிபந் தனையுடன் 14 மீனவர்களையும், யாழ்ப்பாணம் நீதிமன்றம் நேற்று முன்தினம் விடுதலை செய்தது.

இதைத்தொடர்ந்து, 14 மீனவர் களும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். உறவினர்கள் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்