ஆட்டோ ஓட்டுநர்களின் அட்டகாசத்தையும், அவர்களின் விதிமீறல்களையும் போலீஸார் கண்டுகொள்வதில்லை

By செய்திப்பிரிவு

ஆட்டோ ஓட்டுநர்களின் அட்டகாசத்தையும், அவர்களின் விதிமீறல்களையும் போலீஸார் கண்டுகொள்வதில்லை. ஆட்டோக்களில் மூவருக்கு மேல் ஏற்றக்கூடாது என்ற கண்டிப்பான விதிமுறையுள்ளது. ஆனால் அரசு ராஜாஜி மருத்துவமனை சாலை, மாட்டுத்தாவணி பஸ் நிலைய சாலைகளில் ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கள் இருக்கையில் ஒருவர், வலது, இடது புற கம்பிகளில் தலா 2 பேர், மேற்புற இருக்கையில் மூவர், கீழ் இருக்கையில் மூவர் என 10 பேர் வரை ஆட்டோக்களில் ஏற்றிக் கொண்டு பறக்கின்றனர். அவர்கள் மீது போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதால் தற்போது மருத்துவமனை முன்பும் தங்கள் அட்டகாசத்தை தொடங்கியுள்ளனர்.

மருத்துவமனை சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், இதர பணியாளர்களை தினமும் தொந்தரவு செய்து மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். சில நேரங்களில் வாகனங்கள் மீது மோதி சேதத்தையும் ஏற்படுத்துகின்றனர். மாவட்ட போக்குவரத்து போலீஸார் உயர் அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து ஆட்டோ ஓட்டுநர்களின் விதிமுறை மீறல்களுக்கு முடிவுகட்ட வேண்டும். அல்லது போலீஸார் காலை முதல் சாலையில் நின்று போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்