எருது விடும் விழாவுக்கு அனுமதி கோரி வழக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பி பதிலளிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே எருது விடும்விழாவுக்கு அனுமதி கோரி தொடரப் பட்ட வழக்கில், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட் றாம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட தெக்குப்பட்டு கிராம எருது விடும் விழாக்குழுத் தலைவர் துரைசாமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன், பச்சையம்மன் மற்றும் ஓம்சக்தி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தை மற்றும் பங்குனி மாதங் களில் அபிஷேக விழா மற்றும் எருது விடும் விழா நடத்தப்படும். இந்தாண்டு எருது விடும் விழா வுக்கு அரசு அனுமதியளித்த போதும், சட்டம்- ஒழுங்கை காரணம்காட்டி காவல் துறையினர் வாய் யாக அனுமதி மறுத்துள்ளனர். எருது விடும் விழாவுக்கு அனுமதி யளிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

17 mins ago

தமிழகம்

32 mins ago

ஓடிடி களம்

53 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுலா

20 mins ago

தொழில்நுட்பம்

11 mins ago

தமிழகம்

47 mins ago

மேலும்