அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி அடுத்த நெகமத்தில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தமிழக முதல்வர் பழனிசாமி பொள்ளாச்சி பகுதியில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்டார். அப்போது, நெகமம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.வி.பி.சோமசுந்தரம் பொதுமக்கள் சார்பில் முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், “நெகமம் பேரூராட்சி பகுதியில் 700 நெசவாளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். நெகமம் கைத்தறி சேலைகள் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் புகழ் பெற்று வருகின்றன. எனவே, நெசவாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை போல, நெசவாளர் பாதுகாப்பு திட்டத்தை அரசு வழங்க வேண்டும். நெசவு தொழில் செய்யும் நெசவாளர்கள் மரணமடைந்தால் இழப்பீடு தொகையும், நெசவாளர்களுக்கு அரசே காப்பீடு செய்தும் கொடுக்க வேண்டும். நெகமத்தை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மாணவர்களின் எதிர்கால நலன் கருதி நெகமத்தில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

மேலும்