மேம்பாலப் பணியால் அவிநாசி சாலையில் வாகன நெரிசலை தவிர்க்க சிமென்ட் தளம்

By செய்திப்பிரிவு

கோவை அவிநாசி சாலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரூ.1,621 கோடி மதிப்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலம் கட்டும் பணி நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. முதல்கட்டமாக லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் தாங்கு தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

அவிநாசி சாலை ஆறு வழிச்சாலை கொண்ட வழித்தடமாகும். பணிகள் நடைபெறும் இடத்தில் சாலை குறிப்பிட்ட அளவு மறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் மேம்பாலப் பணிகள் தீவிரம் அடையும்போது நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இதனால் தார் சாலைக்கும், நடைபாதைக்கும் இடைப்பட்ட மண் பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையில் சிமென்ட் தளங்கள் அமைக்கப்படுகின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக லட்சுமிமில்ஸ் சந்திப்பு பகுதியில் சாலையோரம் உள்ள நடைபாதை அருகே வாகனங்கள் செல்லும் வகையில் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது. மேலும், பல்வேறு வழிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

9 mins ago

இந்தியா

15 mins ago

வணிகம்

11 mins ago

இந்தியா

26 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்