அவசர அழைப்பு வந்தவுடன் விரைவாக புறப்பட தீயணைப்பு துறையினருக்கு ஒரு நிமிட பயிற்சி போட்டி

By செய்திப்பிரிவு

தமிழக தீயணைப்புத் துறையில் முதன்முறையாக தீயணைப்பு சேவைக்கான நேரத்தை துரிதப்படும் நோக்கில் தீயணைப்பு வீரர்களுக்கிடையே ‘ஒரு நிமிட பயிற்சி போட்டி’ தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சைலேந்திர பாபுவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

தீயணைப்பு நிலையங்களில் அழைப்புகள் பெறப்பட்டவுடன் தீ பாதுகாப்பு உடைகளை அணிந்து, தீயணைப்பு வாகனத்தை இயக்கி ஒரு நிமிடத்துக்குள் நிலையத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே இந்த பயிற்சியின் நோக்கம்.

இந்த போட்டி தமிழகம் முழுவதும் உள்ள 346 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களிலும் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற 5 மண்டல அணிகளுக்கு இடையே மாநில அளவிலான போட்டி நேற்று முன்தினம் சென்னை தாம்பரத்தில் உள்ள மாநில பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் வட மண்டல அணி (54 விநாடிகள்) முதலிடத்தையும், தென் மண்டல அணி (60 விநாடிகள்) 2-ம் இடத்தையும் பெற்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை இயக்குநர் சைலேந்திர பாபு பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தீயணை ப்பு மீட்புப்பணிகள் துறை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) ஷாகுல் ஹமீது,வடமண்டல இணை இயக்குநர் ப்ரியா ரவிச்சந்திரன், துணை இயக்குநர்கள் மீனாட்சி விஜயகுமார், சத்தியநாராயணன் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

38 mins ago

விளையாட்டு

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்