பாஜகவை கண்டால் முதல்வருக்கு 99 சதவீதம் பயம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

By செய்திப்பிரிவு

முதல்வர் பழனிசாமிக்கு பாஜகவை கண்டாலே 99 சதவீதம் பயம். ஒரு சதவீதம் பக்தி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை. ஒரு கட்சி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் நான் தான் நிரந்தர முதல்வர், நான் தான் நிரந்தர பிரதமர் என்ற ஆணவம் வந்துவிடும். அமெரிக்கர்கள் புத்திசாலிகள், அதனால்தான் 8 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்க முடியாத வகையில் சட்டம் வைத்துள்ளனர்.

பாஜகவை அகில இந்திய அளவில் எதிர்க்கும் கட்சி காங்கிரஸ் மட்டுமே. இந்தி அல்லாத பிற மொழியை மேம்படுத்த ரூ.22 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் சமஸ்கிருதத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது.

முதல்வர் பழனிசாமிக்கு பாஜகவை கண்டாலே 99 சதவீதம் பயம். ஒரு சதவீதம் பக்தி. இவ்வாறு அவர் கூறினார். வட்டாரத் தலைவர் ஆரோக்கியதாஸ், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

35 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தொழில்நுட்பம்

40 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்