மாசி, சித்திரை வீதிகளில் முடிவடையாத ஸ்மார்ட் சிட்டி பணிகளால் மதுரை சித்திரை திருவிழாவை நடத்துவதில் சிக்கல்

By செய்திப்பிரிவு

மதுரையில் மாசி மற்றும் சித்திரை வீதிகளில் ஆமை வேகத்தில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் சித்திரைத் திருவிழாவை வழக் கம்போல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றது. விழாவின்போது தினமும் காலை, மாலையில் சுவாமி ஊர்வலம், மாசி மற்றும் சித்திரை வீதிகளில் நடக்கும். அதைக் காண பக்தர்கள் குடும்பம், குடும்பமாகத் திரள்வர். மாசி வீதியில் நடக்கும் தேரோட்டமும் புகழ் பெற்றது.

தற்போது கரோனா தொற்று வெகுவாக குறைந்து வருவதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கோயில் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவியதால் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தடைபட்டது. அதற்கு முந்தைய ஆண்டு தேரோட்ட நாளில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டாவது ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடைந்து சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் இருந்தனர்.

ஆனால் மதுரையில் மீனாட்சி யம்மன் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் கோயில் நிர்வாகமும், பக்தர்களும் வழக்கம்போல் சிறப்பாக சித்திரைத் திருவிழாவை கொண்டாட முடியுமா? என கவலை அடைந்துள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டியின் முக்கியத் திட்டங்கள் அனைத்தும் மீனாட் சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளிலே நடக்கிறது. இந்த திட்டங்கள் கடந்த 2 ஆண் டுக்கு் மேலாக ஆமை வேகத் தில் நடக்கிறது.

இதனால் இந்த ஆண்டும் திருவிழாவில் இடையூறு ஏற்படக் கூடும் என் கின்றனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி அதி காரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, மாசி வீதிகள், சித்திரை வீதிகளில் புதிதாக குழிகள் எதுவும் தோண்டப்படவில்லை. தோண்டிய இடங்களில் இரவு, பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

4 mins ago

கல்வி

18 mins ago

சினிமா

26 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

30 mins ago

விளையாட்டு

46 mins ago

வாழ்வியல்

55 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்