நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபாராஜேந்திரன் தலைமையில் தொமுச மற்றும் சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று என்எல்சி நிறுவனத்தின் தலைவர் ராகேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்

By செய்திப்பிரிவு

நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபாராஜேந்திரன் தலைமையில் தொமுச மற்றும் சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று என்எல்சி நிறுவனத்தின் தலைவர் ராகேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பது:

என்எல்சி நிறுவனத்தில் கடந்த 1994 ம்ஆண்டு முதல் என்எல்சி அப்பரண்டிஸ் பயிற்சி முடித்த தொழிலாளர்களுக்கு பணி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்தவர்களில் பலர் தொழிலாளர்களின் வாரிசுகள், என்எல்சி நிறுவனத்திற்கு வீடு மற்றும் நிலம் கொடுத்தவர்கள், ஊன முற்றோர் என சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் உள்ளனர்.

கடந்த 5.12. 2018-ல் என்எல்சி நிறுவனத்திற்கும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் என்எல்சி அப்பரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரையில் நிரந்தர பணி வழங்கவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. என்எல்சி தலைவர் ராகேஷ் குமார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது என்எல்சி தொமுச பேரவை இணை பொதுச்செயலாளர் சுகுமார், துணை செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் குருநாதன், சிஐடியூ தலைவர் வேல்முருகன், பொதுச்செயலாளர் ஜெயராமன்,பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

ஓடிடி களம்

25 mins ago

விளையாட்டு

40 mins ago

சினிமா

42 mins ago

உலகம்

56 mins ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

45 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்