தாம்பரம் விமான படை மையத்தில் 52 அதிகாரிகளின் பயிற்சி நிறைவு

By செய்திப்பிரிவு

சென்னை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப் படை பயிற்சி மையம் உள்ளது. ராணுவம், விமானப் படை, கடற்படை, கடலோரக் காவல் படையில் விமானிகளாக பணியில் சேரும் வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, நட்பு நாடுகளை சேர்ந்த விமானப் படை வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இங்கு இந்திய விமானப் படையின் 43 அதிகாரிகள், ராணுவம், கடலோரக் காவல் படையை சேர்ந்த தலா 2 அதிகாரிகள், கடற்படையின் 5 அதிகாரிகள் என மொத்தம் 52 அதிகாரிகள் விமானப் பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விமானப் படை பயிற்சி மையத்தின் அதிகாரி ஏர் மார்ஷல் ஆர்.டி.மாத்தூர் பங்கேற்றார்.

பயிற்சியில் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்கி யதற்காக, துருவ் சர்மா என்ற வீரருக்கு மஜிதியா மற்றும் விமானப் படை தளபதியின் கோப்பைகளை அவர் பரிசாக வழங்கினார். இதேபோல, பயிற்சியில் சிறந்து விளங்கிய ரோஷன் ஜெயின், சுபம் கவுதம் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய மாத்தூர், ‘‘பயிற்சி முடித்து பணியில் சேரும் வீரர்கள் தொடர்ந்து கடின உழைப்பின் மூலம் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்’’ என்றார். பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

உலகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்