தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் பாறைகள் சரிந்த பகுதியில் சுரங்க துறையினர் நேரில் ஆய்வு

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் பாறைகள் சரிந்த பகுதியில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

அரூர் வட்டம் தீர்த்தமலையில் பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த தீர்த்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் 5 தீர்த்தங்கள் அமைந்துள்ள பகுதியில் அண்மையில் பெய்த மழையின்போது பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால், கல்யாணராமர் சன்னதியில் சிறிய சேதமும் ஏற்பட்டது. இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை அண்ணா பல்கலைக் கழக சுரங்கவியல் துறை பேராசிரியர் பாலமாதேஷ்வரன் மற்றும் குழுவினரும், சுரங்கவியல் ஆலோசகர் ரமேஷ்சந்திரன் கர்க் ஆகியோரும் நேற்று தீர்த்தமலையில் தீர்த்தங்கள் அமைந்துள்ள மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, அரூர் துணை ஆட்சியர் பிரதாப், தருமபுரி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பிரகாஷ், கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணன், அரூர் சரக ஆய்வர் வளர்மதி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்