பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதால்இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

By செய்திப்பிரிவு

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதற்காகவே இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு உயர் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சலுகையைப் பெற ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய தனக்கு இந்த இடஒதுக்கீட்டைப் பெற விண்ணப்பித்தபோது ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாகக் கூறி வட்டாட்சியர் சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதாகவும், தனக்கு இதற்கான சான்றிதழ் வழங்கக் கோரியும் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பூர்வி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘மனுதாரர் ஆவணங்களின் அடிப்படையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவருக்கான சான்று பெற்று இடஒதுக்கீட்டைப் பெற தகுதியுடையவர் என்பதால் அவருக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் உரிய சான்றிதழை வழங்க வேண்டும். தற்போது உயர் கல்வியில் இடஒதுக்கீடு என்பது தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்து பல்வேறு பிரிவினர் மத்தியிலும் வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது. தகுதியான மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைப்பதில்லை. அதேநேரம் தகுதியில்லாத மாணவர்கள் அந்த வாய்ப்பை இடஒதுக்கீட்டின் மூலம் சுலபமாக பெற்று விடுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு உயர் கல்வியில் உரிய வாய்ப்பு வழங்கும்போது, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் அந்த உயர் கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகளின் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்