ஆதி திராவிடர் மாணவர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி

By செய்திப்பிரிவு

கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தாட்கோ மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரைகுறுகிய கால திறன் மேம்பாட்டுபயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இதன்படி கள தொழில் நுட்ப வல்லுநர் மற்றும் பிற வீட்டு உபகரணங்கள் குறித்த பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் 99422-32244 என்ற எண்ணிலும், ஒப்பனை கலைஞர், முடி ஒப்பனையாளர் பயிற்சி பெற விருப்ப முள்ளவர்கள் 70109-76709 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ள லாம்.

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக வழங்கப்படும் இத்திறன் மேம்பாட்டு பயிற்சி முற்றிலும் கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது. மாணவர் களுக்கு பயணப்படி, போக்குவரத்து செலவு மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகளும் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்