பழமையான கட்டிடத்தை பயன்படுத்த தடை

By செய்திப்பிரிவு

கோவை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவின் சார்பில், மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பழமையான கட்டிடங்களை ஆய்வு செய்து, அவற்றை இடிக்க உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளித்துவருகின்றனர். பெரியகடை வீதியில், வின்சென்ட் சாலைப் பிரிவு அருகே தனியாருக்கு சொந்தமான பழமையானகட்டிடம் உள்ளது. இங்கு 40 கடைகள் உள்ளன. இதில் 10 கடைகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தை உபயோகிக்க தடை விதித்து மாநகராட்சி நிர்வாகத்தினர் நேற்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,‘‘இந்த கட்டிடத்தின் உறுதித்தன்மை மிகவும் குறைந்து பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதனால் கட்டிடத்தின் அருகில் வசிப்பவர்களுக்கும், பாதசாரிகளுக்கும், பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கோவைமாநகராட்சி சட்டம் 1981 பிரிவு 327-ன் கீழ் கட்டிடத்தை உபயோகிக்க தடை விதித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

சினிமா

15 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்