எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டம் விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோநேற்று வெளியிட்ட அறிக்கை:

பாரத் பெட்ரோலியம் நிறுவனம், கோவை இருகூரில் இருந்து பெங்களூர் தேவனகொந்தி வரை எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனால், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் வேளாண் விளைநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். பல்லாயிரக்கணக்கான விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும்.

இந்நிலையில் தற்போது தருமபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி,பாலக்கோடு ஆகிய 2 தாலுக்காக்களில் இத்திட்டத்துக்கான நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்தி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம் ஒப்படைத்து அரசு இதழில் ஆணை பிறப்பித்துள்ளது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு நிலம் கையகப்படுத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

கொங்கு மண்டல விவசாயிகளுக்கு எதிரான, பாஜக அரசின்நடவடிக்கைக்கு, தமிழக அரசுமுழு ஒத்துழைப்பு கொடுத்துவருகிறது. விளை நிலங்களில் எண்ணெய்க் குழாய் பதிப்பதைக் கைவிட்டு, வீண் பிடிவாதம் செய்யாமல், மாற்று வழிகளில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்