புதுச்சேரி பொதுப்பணித்துறையில் சேர நீதிமன்ற உத்தரவு கிடைத்தும் பணியில்லை வாரிசுதாரர்கள் சார்பில் முதல்வரிடம் முறையீடு

By செய்திப்பிரிவு

நீதிமன்ற உத்தரவு கிடைத்தும் புதுச்சேரி பொதுப்பணித் துறையில் பணி கிடைக்காமல் வாரிசுதாரர்கள் தவிப்பதாக முதல்வரிடம் மனு தரப்பட்டுள்ளது.

இதுபற்றி முதல்வர் நாராயணசாமியிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில அமைப்பாளர் தர் அளித்துள்ள மனு விவரம்:

புதுச்சேரி பொதுப்பணித் துறையில் கடந்த 20 ஆண்டுகளாக வாரிசுதாரர்களின் 5 சதவீத இடங்கள்சட்டரீ தியாக நிரப்பாமல், கொல் லைப்புறமாக ஏராளமானோர் நிரப்பப்பட்டுள்ளனர். இதனால் பொதுப்பணித் துறையில் சுமார் 200 வாரிசுதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாரிசுதாரர்கள் 15 பேர், பணிக்காக நீதிமன்ற உத்தரவு பெற்றும் இதுவரை பணி தரப்படவில்லை.

அதே நேரத்தில் ஏனாம் பிராந் தியத்தைச் சேர்ந்தோருக்கு ஒரேயொரு நீதிமன்ற உத்தரவை அடிப்படையாக கொண்டு காலி பணியிடங்களே இல்லாத போதும், 150 பேரை பணி நிரந்தரம் செய்ய கோப்பு தயாரித்துள்ளனர்.

கருணை அடிப்படை வாரிசு பணி இடங்கள் 5 சதவீதத்தை 20 ஆண்டுகளாக நிரப்பாத நிலையில் ஏனாம் பிராந்தியத்தில் காலி பணியிடங்களே இல்லாத போதும் பணி நிரந்தரம் செய்ய முயல்வது ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம்.

கருணை அடிப்படையிலான வாரிசு பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்