நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை தின விழா :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்ட 31-வது தமிழ்நாடு தேசிய மாணவர் படை கமாண்டர் கர்னல் சீனிவாசன் உத்தரவுப்படி, உதகை அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை தின விழா நேற்று நடைபெற்றது.

தேசிய மாணவர் படை அலுவலர் சுப்ரமணியன் தலைமையில், அருகே உள்ள கிராமங்களுக்கு மாணவர்கள் சென்று கரோனா தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், முக கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென வீடு, வீடாக சென்று அறிவுறுத்தினர்.

மேலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினர். அதைத்தொடர்ந்து பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

பள்ளித் தலைமையாசிரியர் அசோக்குமார், சுபேதார் சசிகுமார், கண்காணிப்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பட விளக்கம்

தேசிய மாணவர் படை தினத்தையொட்டி, உதகையை அடுத்த நஞ்சநாடு கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்