தேன்கனிக்கோட்டையில் வன கிராமங்களுக்கு எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

தேன்கனிக்கோட்டை வனச்சரகம் சூரப்பன் குட்டை வனப் பகுதியில் 10 யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்தை ஒட்டியுள்ள கிராமமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை வனச் சரக காப்புக்காட்டில் உள்ள சூரப்பன்குட்டை பகுதியில் 10 யானைகள் முகாமிட்டுள்ளன. இவை இரவு நேரத்தில் காப்புக்காட்டை விட்டு வெளியேறி வனத்தை ஒட்டியுள்ள நொகனூர், மரகட்டா, தாவரக்கரை, லக்கசந்திரா, திம்மசந்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் அருகே சுற்றி வருவதால் யானை கூட்டத்தை ஜவளகிரி வனச்சரகத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் கூறியதாவது, தேன்கனிக்கோட்டை சூரப்பன்குட்டை காப்புக்காட்டில் 10யானைகள் முகாமிட்டுள்ளன. ஆகவே தேன்கனிக்கோட்டை வனச்சரக காப்புக்காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தொழில்நுட்பம்

19 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

49 mins ago

விளையாட்டு

57 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்