தொல்லியல் ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும் : கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா கருத்து

By செய்திப்பிரிவு

மத்திய தொல்லியல் நிறுவனத்தின் (சென்னை) கோயில்கள் பிரிவும், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து பாரம்பரிய சின்னங்கள் பற்றிய கண்காட்சி திறப்பு விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கம் அக்கல்லூரியில் நடைபெற்றது.

மத்திய தொல்லியல் துறை (சென்னை) கோயில்கள் பிரிவு தொல்லியல் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா சிறப்புரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: மாணவர்கள் இப்பகுதியில் கிடைக்கும் அரிய பொருட்களை கல்லூரி அருங்காட்சியத்தில் ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.

டி.கல்லுப்பட்டி பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு பல ஆண்டுகள் ஆகிறது. பின்னர் அதைத் தொடர முடியாத சூழலும் உள்ளது. ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டால் அரிய வகையான பழங்கால பொருட்கள் கிடைக்கலாம் என்றார்.

முன்னதாக, வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் கந்தசாமி வரவேற்றார். கல்லூரிச் செயலர் சிங்கராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் மற்றும் முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வுமைய துறைத் தலைவர் வெங்கட்ராமன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

உதவி தொல்லியலாளர் பிர சன்னா கருத்துரையாற்றினார். இணைப் பேராசிரியர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்