போடி காட்டாற்றில் சிக்கிய மாணவர்கள் : போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், போடி மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் சிக்கி பரிதவித்த 4 பள்ளி மாணவர்களை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குரங்கணி, கொட்டகுடி, துவாக்குடி பகுதி களில் நேற்று பிற்பகலில் கன மழை பெய்தது. இதனால் மலை களில் பெருக்கெடுத்த நீரால் கொட்டக்குடி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

அப்போது ஆற்றின் குறுக்கே உள்ள அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென வெள்ளம் வந்ததால் அவர்கள் மதகுப் பகுதியில் ஏறி நின்று கொண்டனர். நீண்டநேரமாகியும் வெள்ளம் குறையாததால் கரைக்கு வரமுடியாமல் அவர்கள் தவித்தனர்.

இதைப்பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் தீய ணைப்பு நிலைய அதிகாரி சக்தி தலைமையிலான குழுவினர் போடியைச் சேர்ந்த மாணவர்கள் பாபு(14), கண்ணன்(14), கௌதம்(14), ரவி (14) ஆகியோரை பத்திரமாக மீட்டனர்.

போடி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் மாணவர்களை பெற் றோரிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 secs ago

தமிழகம்

2 mins ago

க்ரைம்

8 mins ago

க்ரைம்

17 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்