நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே சேதமடைந்த - தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நிறைவு : அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு ரயில்கள் இயக்க ஏற்பாடு

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே ரயில் தண்டவாளத்தில் மழையால் அரிப்பு ஏற்பட்டதாலும், மண் சரிவாலும் கடந்த 12-ம் தேதி முதல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரணியல் அருகே பேயன்குழி மற்றும் குழித்துறை, பாறசாலை பகுதிகளில் ஏற்பட்ட பெரும் பாதிப்புகள் விரைவாக சீரமைக்கப்பட்டு வந்தன. 13 இடங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து தண்டவாளங்கள் சரிசெய்யப்பட்டன.

ஆனால், குழித்துறை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இரவு பகலாக நடந்தசீரமைப்பு பணி நேற்று காலை நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளர் முகுந்த் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரயில் பாதைகளை பார்வையிட்டு ஆய்வுசெய்கின்றனர். பின்னர் தண்டவாளத்தில் சோதனை ஓட்டமாக ரயில் இயக்கப்படுகிறது. அதன் பின்னர் திருவனந்தபுரம் ரயில் தடத்தில் அனைத்து பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 secs ago

விளையாட்டு

25 mins ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

56 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

3 hours ago

மேலும்