குமரி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து கடந்த 8-ம் தேதி முதல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. விநாடிக்கு 2,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்ததால் அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணை பகுதியை பொதுப்பணித்துறை நீர்ஆதார பொறியாளர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக பேச்சிப்பாறை அணைக்கு 15 நாட்களுக்கு பிறகு நேற்று விநாடிக்கு 1,000 கனஅடிக்கு குறைவாக, அதாவது 932 கனஅடி தண்ணீர் வந்தது. நீர்மட்டம் 43 அடியாக உள்ளது. அணையில் இருந்து 521 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது. அணைக்கு 530 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

5 mins ago

சினிமா

29 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்