காரைக்காலில் மொழி நல்லிணக்கநாள் விழா :

By செய்திப்பிரிவு

காரைக்காலில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மொழி நல்லிணக்க நாள் விழா கொண்டாடப்ட்டது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவின் ஒரு பகுதியாக, நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் மொழி நல்லிணக்கநாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் துணை முதல்வர் எஸ்.சித்ரா தலைமை வகித்தார். காரைக்கால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.ராஜசேகரன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.காளிதாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தேசிய ஒருமைப்பாட்டில் மொழிகளின் பங்கு என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற விரிவுரையாளர்கள் கே.சுப்பிரமணியன், காந்த பட்சிராஜன், வித்யோதயா உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சி.ஆர்.உமாதேவி, திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் ஏ.வைகுண்டம், தலத்தெரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் பி.உமாமகேஸ்வரி ஆகியோர் ஒவ்வொரு மொழியின் சிறப்புகள், தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்துக்கும் அவற்றின் பங்கு உள்ளிட்டவை குறித்து கதைகள் மூலம் விளக்கினர்.

விரிவுரையாளர் ஆர்.சி.கருணாகரன் வரவேற்றார். ஆசிரியர் ஆர்.தனராஜ் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

12 mins ago

உலகம்

33 mins ago

வாழ்வியல்

52 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்