கோடநாடு வழக்கில் கைதான தனபால், ரமேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு :

By செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான் மற்றும் கனகராஜ் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதில், கார் விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் போலீஸார் மறுவிசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை கலைத்ததாக, தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்தனர். இருவரையும் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வந்தனர்.

நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இருவரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர். டிசம்பர் 6-ம் தேதி வரை இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் கூடலூர் கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஜாமீன் மனு தாக்கல்: தனபால், ரமேஷின் ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில், மீண்டும் இருவரது தரப்பிலும் வழக்கறிஞர் ராஜசேகர், உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். மனுக்கள் மீதான விசாரணை வரும் 26-ம் தேதி கோடநாடு வழக்கு விசாரணையின்போது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்