தருமபுரியில் ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த வாழைப்பழம் அழிப்பு :

By செய்திப்பிரிவு

தருமபுரியில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

தருமபுரியில் ரசாயனம் தெளித்து வாழைப் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில் அலுவலர்கள் நந்தகோபால், குமணன் உள்ளிட்டோர் தருமபுரி விவேகானந்தா டவுன் ஹால் வீதி, கடை வீதி பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வாழை விற்பனை மண்டிகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, ஒரு குடோனில் ரசாயனத்தை தெளிப்பான் மூலம் தெளித்து வாழைப் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அங்கிருந்த 100 கிலோ வாழைப்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும், கடை உரிமையாளருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பழங்களை ரசாயனம் தெளித்து விற்பனை செய்வது கண்டறிந்தால் சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.மேலும், உரிமம் புதுப்பிக்காதவர்கள் உடனடியாக உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என அலுவலர்கள் கேட்டுக் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

17 mins ago

சினிமா

46 mins ago

க்ரைம்

27 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

40 mins ago

தொழில்நுட்பம்

22 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்