கன்னியாகுமரி கடற்கரையில் சீஸன் கடைகள் அமைப்பு :

By செய்திப்பிரிவு

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி்க்கு நவம்பர் மாத இறுதியில் இருந்து ஜனவரி மாதம் வரை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சபரிமலை பக்தர்கள் வருவர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகியவையும் இம்மாதத்தில் வருவதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு குவிவர்.

கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு சபரிமலைக்கு குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரியிலும் ஊரடங்கால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சீஸன் கடைகள் மற்றும் பிற கடைகள் எதுவும் செயல்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் அதிக மான பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். ஆனால், சபரிமலை பக்தர்கள் வருகையை கணக்கில் கொண்டு கன்னியாகு மரியில் சீஸன் கடைகள் ஏலம் விட இதுவரை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதே நேரம் கன்னியாகுமரி இந்து அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு உட்பட்ட முக்கடல் சங்கம பகுதி கடற்கரையில் நடைபாதை வியாபாரத்துக்கான 48 சீஸன் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்