முல்லை பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு :

By என்.கணேஷ்ராஜ்

வைகை அணை முழுக் கொள்ள ளவை எட்டியதால் முல்லை பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு நேற்று மாலை குறைக்கப்பட்டது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து நேற்று 139 அடியை நெருங்கியது. நீர்வரத்து விநாடிக்கு 1,897 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து சீராக இருந்ததால் கடந்த 7-ம் தேதி முதல் விநாடிக்கு 1,867 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று காலை இதன் அளவு 933 அடியாகவும், மாலையில் 666 அடியாகவும் குறைக்கப்பட்டது.

வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் பெரியாறு அணையின் நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை யினர் தெரிவித்தனர். அணைக்கு நீர்வரத்து தொடர்வதால் 142அடி அளவு நீர்மட்டம் உயரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். வைகை அணையில் விநாடிக்கு 2,684 கனஅடி நீர்வரத்தும், 1,069 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது.

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவில் நவ.11-ல் பெரியாறு அணையில் 139.5 அடி தேக்கலாம் என்று தெரி வித்திருந்தது. ஆனால் கேரளப் பகுதிக்கு நீர் திறக்கப்பட்டது. நீர்த்திறப்பில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைக் கடைபிடிக்கும் தமிழக அரசு, நீர்த்தேக்குவதில் மட்டும் நீதிமன்ற உத்தரவை கடை பிடிப்பதில்லை, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்