கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள - வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய வேலூர் மாவட்ட ஆட்சியர் :

By செய்திப்பிரிவு

குடியாத்தம் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் வீடு, வீடாக சென்ற மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகுதியுள்ள அனை வரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வேலூர் மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி முகாம் அனைத்து மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்று வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் கரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் தொடர்ந்து வலியு றுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 23 இடங்களில் நடந்து வரும் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். குடியாத்தம் அடுத்த பரதராமி, ராமாலை கிராமங்களுக்கு சென்ற ஆட்சியர் அங்கு நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார்.

பிறகு, ராமாபுரம் கிராமத்துக்கு சென்ற ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வீடு, வீடாக சென்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் யார் ? இதுவரை போடாதவர்கள் யார்? என்பது குறித்து கேட்டறிந்தார். ஆதார் அட்டை பதிவு கொண்டு கரோனா தடுப்பூசி போடாதவர்களை நேரில் சந்தித்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கரோனா பரவலை தடுக்க நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் கரோனா தடுப்பூசி தான் என்பதை விளக்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது, வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பானுமதி, குடியாத்தம் வட்டாட்சியர் லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, யுவராஜ், வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

10 mins ago

விளையாட்டு

26 mins ago

வாழ்வியல்

35 mins ago

ஓடிடி களம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்