ஆயுத பூஜையை முன்னிட்டு - ஓசூரில் பூக்கள் விலை பலமடங்கு உயர்வு :

By செய்திப்பிரிவு

ஓசூர் மலர் சந்தையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பூக்களின் விற்பனை அதிகரித்து உள்ளது. விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஓசூர் பகுதிகளில் இதமான தட்பவெட்பநிலை மற்றும் மண்வளம் காரணமாக பல்வேறு மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரோனா இரண்டாவது அலை ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்த மலர்களின் விற்பனை நாளை (14-ம் தேதி) ஆயுத பூஜை மற்றும் 15-ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு ஓசூர் சந்தைக்கு மலர்களின் வரத்தும், விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் மலர்களின் விலைபலமடங்கு உயர்ந்து வருவதால், மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் மலர்ச்சந்தை வியாபாரிகள் கூறியது:

நடப்பாண்டில் நல்ல மழை பெய்து வருவதால் மலர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. பூக்களின் தேவையும் அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூவின் விலை ரூ.600 முதல் ரூ.800 வரை இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது.

அதேபோல ரூ.10-க்கு விற்பனையான ஒரு கிலோ பட்டன் ரோஜா விலை ரூ.160 முதல் ரூ.200 வரையும், சம்பங்கி ரூ.20-லிருந்து ரூ.80-க்கும், சாமந்தி ரூ.20-லிருந்து ரூ.160-க்கும், மேரிகோல்டு - ரூ.80-லிருந்து ரூ.200-க்கும்,நாட்டு சாமந்தி ரூ.40-லிருந்து ரூ.100-க்கும் மற்றும் காம்புடன் கூடிய ஒரு கட்டு ரோஜாப்பூக்கள்(20) - ரூ.20-லிருந்து ரூ.80-க்கும் என அனைத்து மலர்களின் விலையும் இரண்டு மூன்று மடங்கு வரை விலை அதிகரித்துள்ளது.

இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

17 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

51 mins ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்