நாமக்கல்லில் 6 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: நாமக்கல்லில் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த 6 குழந்தைத் தொழிலாளர்களை தொழிலாளர் துறையினர் மீட்டனர்.

நாமக்கல்லில் உள்ள தொழில் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தொழிலாளர் துறை உதவி ஆணையர் சங்கர் தலைமையில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் ஆண்டனி ஜெனிட், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் விஜய், மோகன், கோமதி, மாலா மற்றும் சைல்டு லைன் பணியாளர்கள் குழந்தைத் தொழிலாளர் தொடர்பான ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது நாமக்கல் - சேலம் மெயின் ரோடு, கொசவம்பட்டி மற்றும் கூலிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண் குழந்தைத் தொழிலாளர்கள் உட்பட 3 வட இந்திய குழந்தைத் தொழிலாளர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் என மொத்தம் 6 பேரை மீட்டனர்.

இதுதொடர்பாக நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தினால் ஒரு குழந்தைக்கு ரூ.20 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 6 முதல் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சினிமா

17 mins ago

சினிமா

31 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

34 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

36 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்