அனைத்து சங்க நிர்வாகிகள் ஆலோசனை :

By செய்திப்பிரிவு

மதுரை - திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் கயத்தாறு அருகே சாலைப்புதூரில் சுங்கச்சாவடி சட்ட விரோதமாக செயல்படுவதாகவும், அதனை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் ஒன்றியக்குழு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கயத்தாறு அருகே உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி அனைத்து சங்கங்கள் பங்கேற்ற கூட்டம் மார்க்சிஸ்ட் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மினி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மணி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சீனிப் பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சாலைப் புதூரில் சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி கயத்தாறு வட்டம் உரிமை பாதுகாப்பு குழு அமைப்பது என, முடிவு செய்யப்பட்டது.

அமைப்பின் தலைவராக மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கருப்பசாமி, அண்ணா தொழிற்சங்க கார் ஓட்டுநர் உரிமையாளர் சங்கத் தலைவர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

59 mins ago

ஜோதிடம்

34 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

மேலும்