நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் திருவண்ணா மலை ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், “பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு மற்றும் கடன் சங்க நிதியை அவரவர் கணக்கில் வரவு வைக்க வேண்டும், சரியான எடையில் அத்தியாவசியப் பொருட்களை தரமாக வழங்க வேண்டும், 3,500 விற்பனையாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், அனைத்து நியாய விலை கடைகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில், நியாய விலை கடை பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

விளையாட்டு

49 mins ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்