:

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம், நஞ்சநாட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தினவிழாவில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு முதியோரை கவுரவித்தார்.

அதன்பின் அவர் கூறும்போது ‘‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள 7முதியோர் காப்பகங்களில், 260பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும்காப்பகங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. காப்பகங்களில் உள்ள அனைத்து முதியோருக்கும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. முதியோர் மற்றும் இணைநோய் உள்ளவர்கள் அத்தியாவசியப் பணிகளைத் தவிர, தேவையின்றி வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம்’’ என்றார்.

தொடர்ந்து, முதியோர் காப்பக நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தேவகுமாரி உள்ளிட்ட முதியோர் காப்பக நிர்வாகிகள், அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்