செங்கை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு : 14 இடங்களில் திமுக - அதிமுக நேரடி போட்டி : பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற தீவிரம்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 14 இடங்களில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக - அதிமுகவினர் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில், 16 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இவற்றுக்கு 124 பேர் போட்டியிடுகின்றனர்.

இப்பதவிகளுக்கு 14 இடங்களில் திமுக - அதிமுக வேட்பாளர்கள் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. பாமக 10 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 15 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும், தேமுதிக 16 இடங்களிலும், அமமுக 9, மக்கள் நீதி மய்யம் 10 இடங்களிலும், சிபிஐ ஓர் இடத்திலும் சுயேச்சைகள் 28 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.

மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு திமுக - அதிமுகவினர் பெரும்பான்மையான இடங்களில் நேரடியாக தேர்தல் களத்தில் உள்ளனர். இவர்கள் தங்களின் ஆட்சியின்போது நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே மாறி, மாறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால், தேர்தல் பிரச்சார களம் விறுவிறுப்படைந்துள்ளது. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளாட்சியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என திமுக, அதிமுகவினர் தீவிரமாக உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 mins ago

இந்தியா

26 mins ago

சுற்றுலா

18 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

9 mins ago

மேலும்