மதுரை மாவட்டத்தில் 1.06 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி : மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தது

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் நேற்று நடந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1 லட்சத்து ஆறாயிரத்து 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் மாநில அளவில் மதுரை மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வாக்குச் சாவடி மையங்கள் உட்பட மொத்தம் 1,330 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடந்தன.

இதை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதில் 1 லட்சத்து ஆறாயிரத்து 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தியதில் மதுரை மாவட்டம் மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது.

சிவகங்கை

காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் கரோனா தடுப்பூசி 3-வது முகாமை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார். மாங்குடி எம்எல்ஏ, மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத் துணை இயக்குநர் ராம்கணேஷ், நகராட்சி ஆணையர் சுதா உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் 450 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏற்கெனவே 6.09 லட்சம் பேர் முதல் தவணையும், 1.37 லட்சம் பேர் 2-ம் தவணையும் என மொத்தம் 7.46 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் இவ்வாறு அவர் கூறினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நேற்று 100 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் தங்க நாணயம், வெள்ளிக் காசு, ஸ்மார்ட் போன், பட்டுப்புடவை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் கிருபாகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் இது வரை 56 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மாவட்டத்தில் நேற்று 700 மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் 60,865 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சிவகாசி ஆயுதப்படை காவலர் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, அசோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வை யிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்