பணி நீட்டிப்பு செய்யக்கோரி - பேரவை முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா :

By செய்திப்பிரிவு

பணி நீட்டிப்பு செய்யக்கோரி தற்காலிக அங்கன்வாடி ஊழியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் 3 மாதத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் என 279 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். பட்டம் படித்தவர்கள், பொறியாளர்கள் உட்பட பலர் ஜூலை மாதம் பணியில் சேர்க்கப்பட்டனர். மூன்று மாதம் முடிவடைவதால் தங்கள் பணியை நீட்டித்து தரக்கோரி முதல்வரை சந்திப்பதற்காக சட்டப்பேரவை முன்பு திரண்டனர். பேரவைக்குள் செல்ல சபை காவலர்கள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து அவர்கள் பேரவை எதிரே பாரதி பூங்கா வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பெரியகடை போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் கலைந்து போகக் கூறினர். அவர்களில் நால்வரை மட்டும் பேரவைக்குள் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக தற்காலிக ஊழியர்கள் கூறுகையில், “படித்த படிப்புக்கு எந்த வேலையும் கிடைக்காததால் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் பணியில் சேர்ந்துள்ளோம்.

இப்போது பணியை நீட்டிக்காவிட்டால் வேலை யிழக்கும் அபாயம் உள்ளது. முதல்வர் எங்கள் பணியை நீட்டித்து தர வேண்டும்” என்று கோரினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 min ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்