‘நகராட்சி ஆணையர் மீதான புகாரை விசாகா கமிட்டி விசாரிக்கும்’ :

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தலைவர் பழனிச்சாமி, செயலாளர் கே.ரங்கராஜ் மற்றும் காங்கயத்தில் பணியாற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சுமார் 25 பேர் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:

காங்கேயம் நகராட்சியில் 30 பெண்கள் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையர், பெண் ஊழியர்கள் சிலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக புகார் அளித்ததால், கடந்த 17-ம் தேதி முதல் நகராட்சி ஆணையரால், தொடர்புடைய பெண் ஊழியர்களுக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சி ஆணையர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் கூறும்போது ‘‘காங்கயம் நகராட்சி ஆணையர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக, பெண் தொழிலாளர்களுக்கான விசாகா கமிட்டி விசாரிக்கும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

சினிமா

7 mins ago

ஓடிடி களம்

39 mins ago

கல்வி

53 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்